இணைய இணைப்பு இருந்தால் போதும் தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளை இலகுவாக கற்றுகொள்ள ஒரு சிறிலங்காவின் இணையத்தளம் உதவுகின்றது அது பற்றி தான் இந்த பதிவு
இந்த இணையத்தளத்தின் முகப்பிற்கு சென்றால் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளை வீட்டிலிருந்தவாறே கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவலுள்ளவர்களுக்கு இந்த தளத்தில் தமிழ் மொழியிலமைந்தஒரு சொல்லை சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்கும் சிங்கள மொழியில் அமைந்த ஒரு சொல்லை ஆங்கிலம், தமிழ் மொழிகளுக்கும், ஆங்கிலத்தில் அமைந்த ஒரு சொல்லை தமிழ், சிங்கள மொழிகளுக்கும் என வெவ்வேறாக மொழி பெயர்துக்கொள்ள முடிவதுடன் அந்தந்த மொழிகளை தட்டச்சு செய்து கொள்வதற்கென குறிப்பிட்ட தளத்திலேயே Keyboad உம் தரப்பட்டுள்ளது.
இன்னும் நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய முக்கியமான சொற்களும், வசனங்களும் பல்வேறு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டு தரப்பட்டுள்ளதுடன் எமது கற்றல் நடவடிக்கைகளை மேலும் இலகுபடுத்தும் பொருட்டு குறிப்பிட்ட சொற்களை அல்லது வசனங்களை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்பதற்கான ஒலி வடிவமும் தரப்பட்டுள்ளது. இந்த பதிவின் இறுதியிலே உச்சரிப்பின் முலம் கற்றுக்கொள்ளும் முகவரி இடப்பட்டுள்ளது அதனூடாக சென்று பார்வை இடலாம்.
இந்த தளத்தினை பயன்படுத்திக்கொள்ள எவ்வித கணக்குகளையும் ஆரம்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. எந்த ஒரு தரப்பினருக்கும் இலகுவாக பேசகற்றுக்கொள்ள முடியும்