நாம் எந்த ஒரு தகவலையும் சுலபமாக இணையத்தில் அறிந்து கொள்ள தேடு இயந்திரங்கள் பயன்படுகின்றது பல தேடு இயந்திரங்கள் இருந்த போதும் இன்று அதிகமானோர் பயன்படுத்துவது கூகுள் தேடுஇயந்திரம் என்பது எல்லோரும் அறிந்ததே இதில் உள்ள ரகசியங்கள் 20 கீழே
1.ஒரு குறிப்பிட்ட இணைய தளத்தில் உள்ள தகவல்களை மட்டும் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் "site" என்ற சொல்லை பயன்படுத்தி தேட முடியும். உதாரணமாக "site: ebay.com" என்று தேடுவதன் மூலம் ebay இணைய தளத்திலுள்ள விடயங்களை முன்னிலையாக பெற்றுக் கொள்ள முடியும்.
2. கூகுள் கல்கூலேடர் மூலம் அடிப்படை கணித முறைகளை செய்து கொள்ளுவதுடன் பை, கொஸ், தான், ரூட் போன்ற கடினமான கணிப்புகளையும் செய்து கொள்ள முடியும். உதாரணம் ; 10 + 20 என்று டைப் செய்து தேடவும், கூகிள் கல்குலேட்டர் திரையில் தோன்றும். அதன் மூலம் எல்லா வகையான கணிப்புகளையும் செய்து கொள்ள முடியும்
3.அலகு மாற்றி மூலம் நாணய மாற்று விகிதங்களையும் தூர, நிறை அளவுகளையும் மாற்றி பெற்றுக் கொள்ள முடியும். உதாரணம்: "1 USD in LKR" என்று டைப் செய்து தேடுவதன் மூலம் நாணய மாற்று விகிதத்தை பெற்றுக் கொள்ளலாம் "1 km in inches" என்று டைப் செய்து தேடுவதன் மூலம் தூர அளவுகளை மாற்றி பெற்று கொள்ள முடியும் மேலும் திரையில் தோன்றும் அழகு மாற்றியின் மூலமும் அலகுகளை மாற்றி பெறலாம்
4. பிரதான நகரங்களின் தற்போதைய நேரத்தை அறிந்து கொள்ள வேண்டுமாயின் "time in " என்ற விதத்தில் டைப் செய்து தேடிக் கொள்ள முடியும். உதாரணம்: "time: Colombo" என்று டைப் செய்து தேடுவதன் மூலம் கொழும்பின் தற்போதைய நேரத்தை அறிந்து கொள்ள முடியும்
5. மொழி மாற்றி மூலம் பிற மொழியில் உள்ள சொற்களை தேவையான மொழிக்கு மாற்றி பெற்று கொள்ள முடியும். "translate in " என்ற விதத்தில் பயன்படுத்த முடியும்.
உதாரணம்: "translate compter in tamil" என்று டைப் செய்து தேடுவதன் மூலம் 'கணினி' என பெற்று கொள்ள முடியும் "translate கணினி in hindi" என்று டைப் செய்து தேடுவதன் மூலம் 'प्रणाली' என பெற்று கொள்ள முடியும்
6. பைல் எக்ஸ்ட்டேன்சங்களை பாவிப்பதன் மூலம் உரிய பைல் வகைகளைத் தேடிப் பெற்றுக் கொள்ள முடியும். உதாரணம்: "zahira filetype:pdf" என்று டைப் செய்வதாம் மூலம் zahira என்ற பெயரில் உள்ள pdf வகையான பைல்களை பெற்று கொள்ள முடியும். filetype:doc என்று பாவித்தால் word documents களை தேடிப் பெற்றுக் கொள்ள முடியும்.
7. விமானத்தின் இலக்கங்களை டைப் செய்து தேடுவதன் மூலம் அது புறப்படும் மற்றும் சென்றடையும் நேரம், இடம் போன்ற தகவல்களையும் அதன் தற்போதைய நிலையையும் அறிந்து கொள்ள முடியும் உதாரணம்: UL217
8. முக்கிய நகரங்களில் திரையிடப்படும் திரைப்படங்கள் பற்றிய தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடியும். இது அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம் போன்ற நாடுகளிலேயே சிறப்பான தகவல்களை தற்போது வழங்குகிறது. நகரங்களின் zip code மூலம் இத்தகவல்களை பற்றுக் கொள்ளலாம். உதாரணம்: 'movies: W11 2BQ' என்று டைப் செய்து தேடுவதன் மூலம் லண்டனில் திரையிடப்படும் திரைப்படங்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.
9. கால நிலை பற்றிய தகவல்களையும் கூகுள் தேடல் மூலம் இலகுவாக அறிந்து கொள்ள வாய்ப்புள்ளது.
உதாரணம்: "forecast: Colombo" அல்லது "weather: Colombo" என டைப் செய்து தேடுவதன் மூலம் கொழும்பு நகரத்தின் ஒரு வாரத்துக்கான கால நிலை எதிர்வு கூறலைப் பெற்றுக் கொள்ள முடியும்.
10. சாதரணமாக தேடல்களின் போது தேடலை ஒத்த கருத்தில் உள்ள ஆனால் எமக்கு தேவையற்ற விடயங்களும் பட்டியல் படுத்தப்படலாம். இதனை தவிர்த்துக் கொள்ள '-' என்ற குறியீட்டை பயன் படுத்தலாம். உதாரணம்; 'apple -iphone' என டைப் செய்வதன் மூலம் iPhone தவிர்ந்த அப்பிள் சம்பந்தமான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.
11. குறிப்பிட்ட நகரத்தின் சனத்தொகை, வேலைவாய்ப்பு, பிறப்பு, இறப்பு போன்ற பொதுவான தரவுகளை பெற்றுக் கொள்ளவும் முடியும். உதாரணம்: 'polulation: Colombo' என டைப் செய்து தேடுவதன் மூலம் கொழும்பின் சனத்தொகை பற்றிய தரவை பெற்று கொள்ள முடியும்
12. ஒரே மாதிரியான இணையத் தளங்களை தேடி பெற்றுக் கொள்ள 'related' என்ற சொல்லை பயன்படுத்தலாம். உதாரணத்துக்கு இலங்கையில் உள்ள செய்தி தளங்களை பெற்றுக் கொள்ள விரும்பின் 'related: dailymirror.lk' என டைப் செய்து தேடி பாருங்கள்.
13. FedEx, USPS, UPS போன்ற பொதிப் பரிமாற்ற சேவை வழங்குனர்களினூடாக பொருட்களை அனுப்பும் போது அல்லது பெற்றுக்கொள்ளும்போது அவர்கள் வழங்கும் இலக்கத்தினை கூகுளில் டைப் செய்து தேடுவதன் மூலம் பொதியின் நிலை பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.
14.சில சொற்களுக்கான வரைவிலக்கணங்களை அறிந்து கொள்ள "Define" என்ற சொல்லினை பயன்படுத்த முடியும்.
உதாரணம்: "Define: management" என்று டைப் செய்து தேடுவதன் மூலம் முகாமைத்துவம் சென்ற சொல்லுக்கான வரைவிலக்கணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்
15. இரண்டு நகரங்களுக்கிடையிலான தூரம், பயண நேரம் போன்ற தகவல்களை பெற்றுக் கொள்ள " to " என்ற விதத்தில் டைப் செய்து தேடிக் கொள்ள முடியும். உதாரணம்: "Colombo to Kalmunai" என டைப் செய்து தேடிப் பாருங்கள்.
16. இரண்டு பிரதான நகரங்களுக்கிடையிலான விமானப் போக்குவரத்து நேர அட்டவணையை பெற்றுக் கொள்ள விரும்பின் " to " என்றவாறு டைப் செய்து தேடித் பெற்றுக் கொள்ள முடியும். உதாரணம்: "Colombo to Dubai" என டைப் செய்து தேடிப் பாருங்கள்
17. கிரிக்கட் போட்டிகள், நேர அட்டவணை, வெற்றி தோல்வி சம்பந்தமான தகவல்களை பெற்றுக் கொள்ள " Vs " என்றவாறு டைப்செய்து தேடிப்பெற்றுக் கொள்ள முடியும்.உதாரணம்: "Sri Lanka Vs England"என டைப் செய்து தேடிப் பாருங்கள்.
18. அண்மையில் உள்ள விமான நிலையம், ஹோட்டல், வைத்தியசாலை போன்ற முக்கிய இடங்களை அறிந்து கொள்ள "Closest" என்ற சொல்லை பயன்படுத்த முடியும் உதாரணம்: "closest: airport", "closest: hotel", "closest: hospital" என டைப் செய்து தேடிப் பாருங்கள்
19. நீங்கள் கூகுள் தளத்தில் தேடியவை அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கும். அவற்றை நீங்கள் தேவையான போது http://google.com/history என்ற பக்கத்தில் அறிந்து கொள்ள முடியும். உங்கள் தேடல்களை பதிவு செய்துகொண்டு பின்னர் தேவையான போது மீட்டு பார்க்கும் வசதியை பெற்றுக் கொள்ள நீங்கள் உங்கள் கூகுள் அக்கௌண்டில் லொகின் செய்து கொண்டிருத்தல் அவசியம்
20. இறுதியாக "do a barrel roll" என்று கூகுளில் டைப் செய்து பாருங்கள்.