இனி இண்டர்நெட் மூலம் முத்தமிடலாம்!

பிரியமானவர்களிடம் அன்பைப் பரிமாறிக்கொள்ள மனிதர்கள் கண்டுபிடித்த ஆயுதங்களில் சுகமானது முத்தம் என்றால் மிகையில்லை. உணர்வு நரம்புகளைத் தூண்டும் இதழ் ஸ்பரிசங்களை அனுபவிக்க முத்தமிடுபவரும் முத்தம் பெறுபவரும் அருகருகே இருக்க வேண்டும் என்ற பாரம்பரிய நடைமுறையை இணையம் தகர்த்துள்ளது.



ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள விசேட கருவி உதவியால் தொலை தூரங்களிலிருப்பவர்களை இனி இணையம் வழியாக முத்தமிட முடியும். மின்னணு தொடர்பு பல்கலைகழகத்தின் கஜிமோடோ லேபராட்டரி உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள முத்த இயந்திரம் வழியாக தொலை தூரத்திலுள்ளவருக்கு முத்தங்களை அனுப்ப முடியும்.

சிறப்புத் தொடு உணர்வு திரையை வாய்க்குள் பொருத்திக் கொண்டு முத்தமிடுவதன் மூலம், அதை உணர்வலையாக மாற்றி எதிர் தரப்பிலுள்ளவருக்கு முத்தமாக அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதிலுள்ள சிறப்பு மென்பொருள் நாக்கின் உணர்வுகளைப் பதிவு செய்து, தொலைவில் கணினியுடன் இணைக்கப்பட்டுள்ள கருவிக்கு அனுப்புகிறது.

நாவின் உணர்வலைகளை மட்டுமே பதிவு செய்து முத்தமாக மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கருவியை மூச்சுக்காற்று (ஏக்கப் பெருமூச்சு?) மற்றும் சுவைகளையும் உணர்ந்து முத்தமாக மாற்றும் வகையில் மேம்படுத்தவும் ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. சுவை உணர்வு, மூச்சின் தன்மை மற்றும் நாவின் ஈரப்பததிற்கு ஏற்ப வகைவகையான முத்தங்கள் பிரியமானவருக்கு வழங்க முடியுமெனில், உலகிலே அதிக சக்தி வாய்ந்த கருவி, இதுவாகத்தான் இருக்கும் என்று சிட்னியிலிருந்து வெளியாகும் சிட்னி மார்னிங் பத்திரிக்கை தெரிவித்து உள்ளது.


Services