பாவனையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியது கூகுள்




கூகுள் தனது பாவனையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையொன்றை நேற்று நிறைவேற்றியது. ஆம், கூகுள் தனது அண்ட்ரோய்ட் இயங்குதளத்தின் மூலம் செயற்படும் சாதனங்களுக்கான குரோம் உலாவியின் சோதனைத் தொகுப்பினை நேற்று வெளியிட்டது.இதன் மூலம் தனது பாவனையாளர்களின் நீண்டநாள் வேண்டுகோளை நேற்று நிறைவேற்றியது.எனினும் அண்ட்ரோய்ட் இயங்குதள வரிசையின் கடைசித் தொகுப்பான 4.0 ‘ ஐஸ்கிரீம் சென்விச்’ மூலம் இயங்கும் சாதனங்களுக்கு மட்டுமே இக் குரோம் உலாவி செயற்படும்.


 

கணனிகளுக்கான தொகுப்பினைப் போலவே இதுவும் வேகமாகவும், இலகுவாகவும் உபயோகிக்கக் கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவிக்கின்றது.

மேலும் உங்கள் கணனியில் உள்ள குரோம் உலாவியில் ‘புக்மார்க்’ செய்யப்பட்டவை உங்கள் அண்ட்ரோய்ட் சாதனத்தில் உள்ள குரோம் உலாவியிலும் ‘புக்மார்க்’ செய்யப்படும் வசதியையும் இது கொண்டுள்ளது.

இதற்கு உங்கள் கூகுள் கணக்குகளை இணைப்பது மட்டுமே அவசியம்.










Tags

Blog Archive

இடுகைகள்