facebook இன் புதிய வசதி like button மாற்றம்



 


சமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும். இந்த தளத்தில் பல வகையான வசதிகள் உள்ளன.இந்த தளத்தில் பலரும் தனது கருத்துகளை தனது புகைப்படங்கள் மூலமாகவும் தன் வீடியோக்கள் மூலமாகவும் பகிர்ந்து கொள்ளுகிறார்கள்.
அதிலும் பேஸ்புக்கில் நாளுக்கு நாள் நிறைய மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கிறது. பல புதிய வசதிகளை சேர்க்க இருக்கிறது


பேஸ்புக்கில் விருப்பமான தகவல்கள் அல்லது புகைப்படங்களை “லைக்” என்ற வாசகத்தை தேர்வு செய்து, விருப்பத்தை தெரிவிப்பது வழக்கம். இதுவே வாவ், லவ், பூம் போன்று உணர்வுகளை வெளிப்படுத்தும் வார்த்தைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கு டைப் தான் செய்ய வேண்டும். இனி உணர்வுகளை வெளிப்படுத்தும் வார்த்தைகளுக்கும் பட்டன் ஆப்ஷன் கொடுக்க இருக்கிறது பேஸ்புக்.

பேஸ்புக் வளர்ச்சியை பார்த்தால், மனதில் நினைத்தாலே போதும், அதுவும் பேஸ்புக்கில் வந்துவிடும் போல் இருக்கிறது என்று வேடிக்கையாக கூட தோன்றுகிறது. ஆனால் பேஸ்புக், டிவிட்டர் போன்ற சோஷியல் மீடியா மக்களிடம் பெற்று வரும் வரவேற்பு நிச்சயம் பாராட்டுதற்குறிய ஒன்று தான்.







Tags

Blog Archive

இடுகைகள்