blackberry மொபைலின் புதிய வசதி அறிமுகம்


வாடிக்கையாளர்களின் வசதியை மனதில் கொண்டு செயல்படும் நிறுவனங்களில் பிளாக்பெர்ரி நிறுவனமும் ஒன்று. அந்த வகையில் இருப்பிடத்தை பொறுத்து வசதிகளை வழங்கும் மேம்படுத்தப்பட்ட வசதியை தனது போன்களில் பிளாக்பெர்ரி வழங்க இருக்கிறது.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் போனை வைத்திருக்கும் இடத்தை அடிப்படையாக கொண்டு வாடிக்கையாளருக்கு தேவையான வசதிகளை அந்த போன் வழங்கும். அந்த இடத்தைச் சார்ந்த அனைத்து தகவல்களும் நெட் வசதியின் மூலம் பெற முடியும்.

இதனால் எந்த இடத்தில் இருக்கிறோமோ அந்த இடத்தின் தகவல்களை தேடி அலைய வேண்டாம். சில மொபைல்களில் ஜிபிஎஸ் வசதியின் மூலம் இந்த லொக்கேஷன் வசதியினைப் பெறலாம். அதுவும் சில ஸ்மார்ட் மொபைல்களில் இருப்பது கடினம்.




இதுபோன்ற விஷயத்தில் பிளாக்பெர்ரி ரிம் வசதி ஒரு மாற்றத்தைக் கொடுக்கும். இந்த வசதிகளைக் கொடுக்க ஜிபிஎஸ் 30 வினாடி எடுத்துக்கொள்கிறது. ஆனால் ரிம் மூலம் உடனடியாக லொக்கேஷன் வசதியினைப்பெற முடியும். இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் எந்த இடத்தில் போன் இருக்கிறது என்பதை மிகவும் துல்லியமாக, அதாவது நாம் இருக்கும் இடத்தை 60-200 மீட்டர் வரையில் துல்லியமாக கணக்கிட்டு வசதிகளை வழங்கும்.

இந்த வசதியை மேம்படுத்தப்பட்ட வைஃபை தொழில்நுட்பத்தின் மூலம் வழங்கும் வகையில் பிளாக்பெர்ரி உருவாக்கியுள்ளது. இதில், பிளாக்பெர்ரி ஆப்பரேட்டிங் சிஸ்டம் 6 அப்லோட் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு புதிய அப்பிளிகேஷன் ப்ரொக்ராமிங் இன்டர்பேஸ் என்று கருதப்படுகிறது.

இந்த பிளாக்பெர்ரி மொபைலில் பேஸ்புக், ஃபோர்ஸ்கொயர் போன்ற வசதிகளையும் பெறலாம். புதிய தொழில் நுட்பத்தைக் கொடுக்கத் தயாராகும் இந்த முயற்சி இன்னும் சில மாதங்களில் முடிவடைந்துவிடும் என்று எதி்ர்பார்க்கப்படுகிறது.






Tags

Blog Archive

இடுகைகள்