தமிழ் எழுதமேலும் ஒரு மென்பொருள்.



இறுதியாக பதியப்பட்ட இனிமேல் நாம் அனைவரும் தமிழில் டைப் செய்யலாம் என்ற பதிவில ஒரு தமிழ்லில் எழுதும் மென்பொருள் பற்றி பதிவாக இருந்தது இது மேலும் ஒரு   மென்பொருள் பற்றிய பதிவு

இந்த மென்பொருள் தமிழ் உட்பட அசாமிய மொழி, வங்காளம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு ஆகிய இந்திய மொழிகளை உள்ளீடு செய்ய உருவாக்கப்பட்ட மென்பொருள் ஆகும். 


 


என் எச் எம் ரைட்டரை நிறுவும்போதே தமிழ் மொழியை உள்ளீட்டு மொழியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். பதிவிறக்க இணைப்பில்முதலாவதாக உள்ள அதிகாரப் பூர்வத் தளத்தில் இருந்து கிடைப்பதைத் தவிர ஏனையவற்றில் தமிழையே உள்ளீட்டு

மொழியாக கொள்ளும். பதிவிறக்க இணைப்பில் இறுதியாக உள்ளதைத் தவிர ஏனையவை விண்டோஸ் ஆரம்பிக்கும் போதே ஆரம்பித்துவிடுவதால் தமிழில் தட்டசுச் செய்வதும் எளிதானாகும்.

குறிப்பு: கடைசியாக் கொடுக்கப்பட்ட இணைப்பில், விண்டோஸ் விஸ்டா/7 இயங்குதளங்களில் சரிவர வேலைசெய்யும். இதன் சிறப்பம்சமே, இது விண்டோஸ் எக்ஸ்பி கணினிகளில் கிழக்கு ஆசிய மொழிகள் தேர்ந்தெடுக்கப்படாவிட்டாலும் சரிவர வேலை செய்யும் தன்மையுடையது.

ஆதரிக்கும் தமிழ் விசைப்பலகைகள்:

Alt+0 விசைபலகை இல்லை அல்லது கணினியின் விசைப்பலகை (உங்கள் விண்டோஸ் ஆங்கிலப் பதிப்பாயின் ஆங்கிலம்)

சிறப்பம்சங்கள்:

என் எச் எம் ரைட்டர் மென்பொருள் அசாமிய மொழி, வங்காளம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி,  தமிழ்&தெலுங்கு என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது.

கூகிள் குரோம், பயர்பாக்ஸ், சபாரி, இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், ஓப்ரா,என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது.

எம்எஸ் ஆபீஸ் (விண்டோஸ் லைவ்ரைட்டர், அவுட்லுக், நோட்பேட், எம்எஸ் வேர்ட், எம்எஸ் எக்செல், எம்எஸ் பவர்பாயிண்ட்) மென்பொருள்களுடன் சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது.

வின்டோஸ் XP / 2003 மற்றும் விஸ்டா ஆப்ரேடிங் சிஸ்டமில் இந்த மென்பொருளை நிறுவ முடியும்.

தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் கூட என் எச் எம் ரைட்டர் மென்பொருள் மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும். ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று தமிழில் பார்க்கும் வசதி. ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் தட்டச்சு விசைப்பலகை பயன்படுத்த முடியும்.

இந்த மென்பொருளை நிறுவ வின்டோஸ் XP/2003 மற்றும் விஸ்டா ஆப்ரேடிங் சிஸ்டம் CD தேவையில்லை.

தரவிறக்க  சுட்டி 





 

facebook இன் புதிய வசதி அறிமுகம்



பல மில்லியன் மக்களின் மனங்களை வென்ற சமூக இணையத்தளமான பேஸ்புக் தொடர்ந்து முன்னிலையில் காணப்படுகின்றது.


இந்த முதலிடத்தை தக்கவைத்து மேலும் அதிகளவான பயனர்களை தன்னகப்படுத்தும் முயற்சியில் இடைவிடாது செயற்பட்டு பல வசதிகளை பயனர்களுக்காக அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

அதன் அடிப்படையில் கோப்புகளை பரிமாற்றும் வசதியினை தற்போது மேம்படுத்தி வழங்க முன்வந்துள்ளது.


அதாவது இதுவரை காலமும் தனித்தனியாகவே கோப்புக்களை பரிமாற்றக்கூடிய வசதி காணப்பட்டது. ஆனால் தற்போது கோப்புக்களை கூட்டாக பரிமாற்றக்கூடிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் 25 MB அளவுடைய கோப்புக்களை தரவேற்றம் செய்து நண்பர்களிடையே பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.

எனினும் பாதுகாப்புக் கருதி சில வகையான கோப்புக்களை மட்டுமே இவ்வாறு தரவேற்றம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.





வீடியோக்களை 3D வீடியோக்களாக மாற்ற




நம்மிடம் இருக்கும் வீடியோ கோப்புகளை ஒரு போர்மட்டில் இருந்து வேறு வகையான போர்மட்டுக்கு மாற்றுவதற்கு ஏராளமான மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கின்றன.

ஆனால் தற்போது நம்மிடம் உள்ள சாதாரண இரு பரிமாண(2D) படங்களையும், வீடியோக்களையும் மிக எளிதாக முப்பரிமாண(3D) வீடியோக்களாக மாற்றலாம்.


இதற்கு ஒரு மென்பொருள் துணை புரிகிறது. இந்த மென்பொருள் மிக எளிதான முறையில் வீடியோக்களை 3D வீடியோக்களாக மாற்றி தருகிறது.

எனினும் இந்த மென்பொருள் இயங்குவதற்கு ஏற்புடைய சாதனம் தேவை. உதாரணாமக 3D தொலைக்காட்சி, LG முப்பரிமாண தொலைபேசி, NDS போன்ற சாதனங்களிலேயே இவ் முப்பரிமாணத் தன்மையை பார்வையிட முடியும்.

முப்பரிமாண கணணி மொனிட்டர் திரையினை கொண்டவர்கள் இலகுவாக you-tube இல் தரவேற்றி பார்வையிட்டுக் கொள்ளலாம். மேலும் இதன் மூலம் உங்களுக்கு தேவையான போர்மட்டுக்களிலும் மாற்றிக் கொள்ளலாம்.
    
                Downlord

பல லட்சம் பெறுமதியான மென்பொருட்கள் இலவசமாக பெற





இந்த தளம் சென்று பாருங்கள் எத்தனை மென்பொருட்களை இச்சேவையில் இலவசமாக நாம் பெறலாமென பட்டியலிடப்பட்டுள்ளது.3920$ பெறுமதியுள்ள மென்பொருட்களை வெறும் 30 செக்கன்களில் நாம் பெற்றுவிடமுடியும்.

Software

 
இதோ அதற்கான வழி!

இந்த  தளத்திற்கு சென்று மென்பொருட்களின் பட்டியலுக்கு கீழாக செல்லுங்கள். கீழுள்ள படத்தை போன்ற ஒரு newsletter box வரும்


Software

அதில் உங்களுக்கு தேவையான மென்பொருள் பட்டியலை தெரிவு செய்து கேட்கப்பட்ட ஏனைய தகவல்களை வழங்கி கீழுள்ள ஓரேன்ஸ் நிற பொத்தானை சொடுக்கி விடுங்கள்.



சற்று பொறுத்து நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரி சென்று பாருங்கள்.

உங்களுக்கு இது போன்றதொரு மின்னஞ்சல் வந்திருக்கும்.
RE: Dhana, here's your $3,920 in software gifts!
அந்த மின்னஞ்கலில் உங்களுக்கான தரவிறக்க லிங்கும் பின்வருமாறு தரப்பட்டிருக்கும்.

                 * http://www.software-giveaway.com/freesoftware/dl/?id=xxxxxx 

அந்த லிங்கில் சொடுக்கி உங்களுக்கான தரவிறக்க இணைப்புடன் கூடிய பக்கத்திற்கு சென்று நீங்கள் விரும்பிய மென்பொருட்களை தரவிறக்கலாம்.

இணையத்தள  முகவரி






இனிமேல் நாம் அனைவரும் தமிழில் டைப் செய்யலாம்




தமிழ்லில்  எழுதுவது சிலருக்கு மிக  கடினமானதாக இருக்கும் சிலர்  Google Translate பயன்படுத்தி எழுதுவார்கள் ஆனால்  உங்கள் கணனி  windows 7 / visa ஆக இருந்தால் நான் முன்னர் பதிந்த தமிழில் இணைய தளங்களில் எழுதுவது எப்படி? என்ற பதிவை பாருங்கள்  ஆனால் இது windows xp யில் இயங்காது

 
 நம்மில் இன்னும் அதிகமானோர் xp யையே இன்னும் பயன்படுத்தி வருக்கின்றோம்  எனவே தான் xp யில் தமிழ்லில் எழுத வேண்டிய மென்பொருள் தேவைப்படுகின்றது. மைக்ரோ சாப்ட் நிறுவனமே நமக்கு இலவசமாக ஒரு அருமையான  மென் பொருளை தருகின்றது  இது   7 / xp / vista  அனைத்திலும்  இயங்க  கூடியது  அது மட்டுமல்லாது சுலபமாக எழுதக் கூடியது 

தரவிறக்க  சுட்டி





 

வெளிவந்தது samsung galaxy s3

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கையடக்கத்தொலைபேசியான செம்சுங் கெலக்ஸி SIII இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.


 
லண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் உத்தியோகபூர்வ கையடக்கத்தொலைபேசியாகத் இது தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது இதன் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.

செம்சுங் கெலக்ஸி வரிசையின் SII கடந்த வருடத்தில் வெளியாகி சிறந்த கையடக்கத்தொலைபேசிக்கான விருதைப் பெற்றதுடன் விற்பனையிலும் சாதனை படைத்தது.

இதேவரிசையில் இன்று வெளியாகவுள்ள கெலக்ஸி SIII யும் விற்பனையில் சாதனை படைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

குவாட் கோர் புரசசர், 12 மெகா பிக்ஸல் கெமரா ஆகியவற்றுடன் 4.8 அங்குல திரையையும் இப்புதிய கையடக்கத்தொலைபேசி கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றபோதிலும்.

எதுவும் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

'ஸ்மார்ட் போன்' சந்தையில் அப்பிளுக்கு போட்டியளிக்கக் கூடிய நிறுவனமாகத் திகழ்வது செம்சுங் மட்டுமே.

இவ்வருடத்தின் முதல்காலாண்டில் செம்சுங் அப்பிளை விட அதிக ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 





Youtube வீடியோக்களில் விரும்பிய பகுதியை Ringtone ஆக்க




ஒன்லைனில் நமக்கு விரும்பிய யூரியீப் வீடியோவை Mp3 வடிவ ரிங்டோனாக மாற்றி தரவிறக்கிக்கொள்ள ஓர் தளம் உள்ளது.

இத் தளத்தில் நாம் ரிங்டோனாக மாற்றவேண்டிய யூரியூப் வீடியோவின் முகவரியை Step1 என்பதில் உள்ள URL என்ற கட்டத்திற்குள் கொடுக்க வேண்டும்.

அடுத்து வரும் Step 2 இல் வீடியோவில் தேவையான பகுதியை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

அடுத்து Ringtone name என்பதில் save செய்ய விரும்பிய பெயரை கொடுக்க வேண்டும், அடுத்து இருக்கும் File Format என்பதில் என்ன என்ன Format-ல் நமக்கு தேவையோ அதை தேர்ந்தெடுக்க வேண்டும். எல்லாம் தேர்ந்தெடுத்து முடித்த பின் MAKE A RINGTONE என்ற பொத்தானை சொடுக்க வேண்டும். உடனடியாக சில நொடிகளில் நாம் வைத்த Ringtone name .mp3 என்று கிடைக்கப்பெறும் இதன் மேல் Right Click செய்து Save as அல்லது Save link என்பதை சொடுக்கி நம் கணினியில் எளிதாக சேமிக்கலாம்.

Youtube வீடியோக்களில் விரும்பிய பகுதியை Ringtone ஆக்க


Tags

Blog Archive

இடுகைகள்